தினமணி 02.11.2010
உள்ளாட்சிகள் தின விழாவில் ரூ. 6.12 லட்சம் நலத்திட்ட உதவி
நாமக்கல், நவ. 1: நாமக்கல் நகராட்சியில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சிகள் தின விழாவில் ரூ. 6.12 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்புகள் மற்றும் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையிலும், நகராட்சித் திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் இரா.செல்வராஜ் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) கே.பாலச்சந்திரன், நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதில், 102 பயனாளிகளுக்கு ரூ. 6.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், விநாடி–வினா போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. சுகாதார அலுவலர் முகமுது மூசா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.