திருவாரூர் நகரில் 62 நாய்களுக்கு கருத்தடை–தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்
திருவாரூர் நகரில் 62 நாய்களுக்கு கருத்தடைதடுப்பூசி போடப்பட்டதாக நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் தெரிவித் துள்ளார்.
திருவாரூர் நகராட்சி ஆணையர்(கூடுதல் பொறுப்பு) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கருத்தடை
திருவாரூர் நகராட்சி பகுதி யில் 1,515 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநாய் தடுப்பூசி போடவும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை ஒரு வாரகாலம் திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேசன் மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 32 நாய் களுக்கு ஆபரேசனும், 30 நாய் களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி யும் கால்நடை மருத்துவ அலு வலர்கள் ஆறுமுகம் மற்றும் சுப்பையன் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டு இருந்தது.