தினகரன் 26.12.2009
நகராட்சி வரிபாக்கி ரூ. 6.45 லட்சம் வசூல்
நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் சொத்துவரி பெயர்மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய 27 விண்ணப்பங்களும், குடிநீர் இணைப்பு மாற்றம் செய்ய 33 விண்ணப்பங்களும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு 72 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் நகராட்சிக்கு வரவேண்டிய வரிபாக்கி ரூ. 6.45 லட்சம் வசூலாகியுள்ளதாக நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.