தினமணி 25.11.2010
ரூ. 65 லட்சத்தில் மேலரதவீதி சாலை அகலப்படுத்தும் பணிசிதம்பரம், நவ. 24: சிதம்பரம் நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ. 65 லட்சம் செலவில் மேலரதவீதி சாலையை 633 மீட்டர் தூரத்துக்கு அகலப்படுத்தி பலவழித்தடச் சாலையாக மாற்றும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மேலரதவீதி பஸ்நிறுத்தம் எதிரே திட்டப் பணிக்கான பெயர்ப் பலகையை கோட்டாட்சியர் அ.ராமராஜு, திறந்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் எம்.காமராஜ், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சீனுவாசன், உதவிப் பொறியாளர் தனராஜன், போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் நகரை அழகுப்படுத்த ரூ. 3 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக மேலரவீதி சாலையை அகலப்படுத்தி அழகுப்படுத்தப்படும். இந்த பணி 3 மாதத்துக்குள் முடிக்கப்படும் என கோட்டாட்சியர் அ.ராமராஜு தெரிவித்தார்.