தினபூமி 30.08.2013
முதல்வர் பிறந்தநாள்: 65 லட்சம் வீடுகளுக்கு செம்மரச்செடி
சென்னை, ஆக. 30 – ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 65லட்சம் வீடுகளுக்கு
செம்மரச்செடி நடுவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது .
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
சிறப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இது குறித்து மேயர் சைதை துரைசாமி
பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த தினத்தின் போது சென்னை
மாநகரில் மரம், செடி, நடப்படுகிறது. மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட 318
கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்வழி தடங்களின் இரு கரைகளிலும் 636 கி.மீட்டர்
நீளத்திற்கும், 126 குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளில் 113
கி.மீட்டர் நீளத்திற்கும் மொத்தம் 749 கி.மீட்டர் நீளத்திற்கு பனைமரங்கள்
நடப்பட உள்ளன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் மண் அரிப்பை தடுக்கும் வகையிலான 6ஙூ
லட்சம் பனை மர, செடிகள் நடநடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பணி தமிழ்நாடு
மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற
அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
சிகப்பு சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரக் கன்றுகள் தோட்டத்துடன்
கூடிய தனி வீடுகள் கொண்டு ஒவ்வொரு வருக்கும் அவர்களின் குழந்தைகள்
எதிர்காலத்திற்கு பயன் பெறும் வகையில் வைப்பு நிதியாக அடுத்த தலைமுறை
பயன்பெறும் பொருட்டு 65லட்சம் செம்மரக்கன்று வழங்கப்படுகிறது.ஒவ்வொரு தனி
வீட்டு உரிமையாளரும் மாநகராட்சியை அணுகினால் செம்மரக்கன்றுகள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் வைட்டமின் ‘ஏ’ என்ற
உயிர் சத்தை பெறும் வகையில் அனைவருக்கும் ஒரு பப்பாளி கன்று 65 லட்சம்
எண்ணிக்கையில் வழங்கப்படும்.
வீடுகள், பூங்காக்கள், பள்ளி வளாகங்கள் விளையாட்டு மைதானம் மருத்துவ
வளாகங்கள், மயான புமிை மற்றும் நீர்நிலை பகுதிகளில் கொசுவை
கட்டுப்படுத்தும் வகையில் 65ஙூ லட்சம் நொச்சி செடிகள் நடப்படுகிறது.
மேலும் நொச்சி செடியை வீடுகளில் நட்டு பராமரிக்க விரும்புபவர்கள்
மாநகராட்சியில் இலவசமாக பெறலாம். இதன் மூலம் சென்னை மாநகரில் பசுமை போர்வை
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை இந்தியாவே வியக்கும் வண்ணம்
சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தி உள்ள 33.3 சதவீதம் பசுமை என்ற இலக்கினை
அடையும் என்ற வகையில் செயல் படுத்துவோம்.
இவ்வாறு மேயர்.சைதை.துரைசாமி கூறினார்.