புதிதாக ரூ.7 கோடியில் 16 இயந்திரங்கள்
சென்னை:கழிவுநீர் அடைப்பு நீக்கும் பணிக்காக, 7 கோடி ரூபாயில் புதிதாக, 16 இயந்திரங்கள், சென்னை குடிநீர் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை குடிநீர் வாரியத்தில், கழிவுநீர் அகற்றும் பணிக்காக, 3.6 கோடி ரூபாயில், பத்து ஜெட்ராடிங் இயந்திரங்களும், 2.33 கோடி ரூபாயில், ஜெட்டிங் கம் ஜங்ஷன் இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன.
புதிய வாகனங்கள், வண்ணாரப் பேட்டை, ஆர்.கே.நகர், ராயபுரம், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பெரம்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளுக்கு, வழங்கப்படும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில், 5.52 கோடி ரூபாயில், 62 துார்வாரும் இயந்திரங்களும், 2.35 கோடி ரூபாயில், 10 ஜெட்ராடிங் இயந்திரங்களும் வாங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
சென்னையில், எங்கு பார்த்தாலும் சாலைகளில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, கூடுதலாக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முறையாக பயன்படுத்தி, சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை கட்டுப்படுத்த வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.