தினகரன் 01.02.2011
ரூ. 7 லட்சத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம்

கோவை மாநகராட்சி சார்பில் கொசுப்புகை மருந்தடிக்கும் இயந்திரங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
கோவை,பிப்.1:
கோவை மாநகராட்சி 72 வார்டுகளில் அனைத்து வீதிகளில் கொசு ஒழிக்கும் பணிக்காக வாகனங்களில் பொருத்தப்பட்ட 4 புகை மருந்தடிக்கும் எந்திரம், 12 ஆட்டோக்களில் பொருத்தப்பட்ட எந்திரம், பணியாளர்கள் கைகளால் இயக்கப்படும் 20 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆட்டோக்கள் செல்ல முடியாத குறுகலான வீதிகள் மற்றும் சந்துகளில் மருந்தடிப்பதை தீவிரப்படுத்த மண்டலத்திற்கு 5 விகிதம் நான்கு மண்டலத்திற்கும் 20 கொசுப்புகை மருந்தடிக்கும் எந்திரம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்ட கொசுப்புகை மருந்தடிக்கும் எந்திரம் நேற்று அந்தந்த மண்டலத்திற்கு வழங்கப்பட்டன. மேயர் வெங்டாச்சலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் வழங்கினர். மாநகராட்சி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கார்த்திக், துணை ஆணையாளர் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர்கள் பாரி, மேற்குமண்டல தலைவர் வி.பி.செல்வராஜ், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் அருணா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், சுகாதார குழு தலைவர் நாச்சிமுத்து மற்றும் அதன் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. விழா குறித்து முறையான அழைப்பிதழ் இல்லாததால் பங்கேற்கவில்லை என நாச்சிமுத்து தெரிவித்தார்.