தினமணி 30.07.2013
தினமணி 30.07.2013
மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய 7 பழைய இரும்புக் கடைகளுக்கு சீல்
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மருத்துவக்
கழிவுகளைக் கொட்டிய 7 பழைய இரும்புக் கடைகளுக்கு மாநகராட்சியின் சுகாதாரப்
பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
வெள்ளலூர் குப்பைக் கிடங்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 3 முறை
மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக விசாரிக்க சுகாதாரப்
பிரிவு அலுவலர், மேற்பார்வையாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
தனியார் நிறுவனத்திடம் இருந்து 20 டன் மருத்துவக் கழிவுகளை 7 பழைய
இரும்புக் கடையினர் வாங்கியுள்ளனர். அதிலிருந்து இரும்பு தொடர்பான
பொருள்களைப் பிரித்தெடுத்துவிட்டு எஞ்சியவற்றை குப்பைக் கிடங்கில் கொட்டி
வந்தனர். இக்கடைகள் நபி நகர், வடிவு நகர் பகுதியில் உள்ளன.
மாரிச்செல்வனுக்குச் சொந்தமான 2 கடைகள், ரத்தினசாமி, கணேஷ், சிவமணி,
ஆனந்த், முத்துபாண்டி ஆகியோருக்குச் சொந்தமான தலா ஒரு கடைகள் ஆக மொத்தம் 7
கடைகளுக்கு சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
வெள்ளலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுச் செயலர் கே.எஸ்.மோகன்
கூறுகையில், சீல் வைத்தவுடன் நடவடிக்கை நின்றுவிடக் கூடாது; தொடர்ந்து
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.