தினமலர் 25.01.2010
சிவகாசி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணிக்கு 7 பேர் நியமனம்
சிவகாசி:சிவகாசியில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் ஆலோசனையில் தடுப்பு நடவடிக்கைள் துவக்கியுள்ளன.
சிவகாசி நகராட்சி பகுதிகளில் நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுப் புழுக்களை ஒழிக்க “டெமிபாஸ்‘ மருந்து கரைசல் ஊற்றுவதற்கும், இரவில் கொசு புகை மருந்து தெளிக்கும் பணிகள் செய்திட 7 பணியாளர்கள் நான்கு மாதத் திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ச்இவர்கள் தண்ணீர் தொட்டிகள், கீழ்நிலை, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு புழுக்கள் வளர்கின்றனவா என பார்த்து மருந்து கரைசல் ஊற்றி அழிப்பார்கள். பிளாஸ்டிக் கப்புகள், உபயோகமற்ற டயர்கள், உரல்கள் தேங்கிய நீரை வடித்து விடுவார்கள் என நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார