தினத்தந்தி 30.11.2013
கோவை ஜி.எம்.நகரில் ரூ.70 லட்சம் செலவில் புதிய சாலை

கோவை 74–வது வார்டு பகுதி, ஜி.எம்.நகர் உள்பட பல இடங்களில் தார்ச்சாலை
அமைக்கப்படாமல் உள்ளது. எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று வார்டு
கவுன்சிலர் ஆர்.ஏகாம்பரம் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து கோவை
மேயர் செ.ம.வேலுசாமி உத்தரவின்பேரில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜி.எம்.நகர் பகுதி, கோட்டைபுதூர் பகுதிகளில் ரூ.70
லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய சாலை
அமைக்கப்பட்ட பகுதிகளை உதவி என்ஜினீயர் பாலசந்தர் ஆய்வு செய்தார். புதிய
சாலை அமைக்கப்பட்டு உள்ளதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
கவுன்சிலருக்கு நன்றி தெரிவித்தனர்.