தினபூமி 20.10.2013
ரூ.717 கோடியில் கூட்டு குடிநீர் திட்டங்கள்: முதல்வர் உத்தரவு
சென்னை, அக்.20 – திருப்பூர் _ கோவை _ தஞ்சாவூர் மாவட்டங்களில் ரூ.717
கோடியில் கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடங்க முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களின் அடிப்படை தேவைகளில்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தமிழகத்தில்
உள்ள மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்கப்
பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில், மூலனூர்,
தாராபுரம், குண்டடம் மற்றும் காங்கேயம் மற்றும் <ரோடு மாவட்டத்திலுள்ள
சென்னிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,262 ஊரக குடியிருப்புகளில்
வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக கொடுமுடிக்கு
அருகிலுள்ள காவிரி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு 91 கோடியே 16 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும்,
இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 3 கோடியே 52 லட்சத்து 80
ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு
பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைத்திட வழிவகை ஏற்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி, பெருமகளூர் மற்றும்
அதிராமபட்டினம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த
1,153 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து
கொடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 495 கோடியே 70
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்
செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 9
கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதாவின்
உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 5 லட்சத்து 76 ஆயிரம்
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைத்திட வழிவகை ஏற்படும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை,
வேடப்பட்டி, தாளிக்ஷ்ர், ஆலந்துறை, பே%ர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும்
தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும்
மக்களுக்கு குடிநீர் வசதி செய்துக் கொடுப்பதற்காக பவானி ஆற்றின் நீரை
ஆதாரமாகக் கொண்டு 130 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு
குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர
பராமரிப்பு செலவாக 3 கோடியே 91 லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் முதல்வர்
ஜெயலலிதாவின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 1
லட்சத்து 55 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து
வழங்குவதற்கு வழிவகை ஏற்படும்.
மொத்தத்தில் திருப்பூர், <ரோடு, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர்
மாவட்டங்களில் 717 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு
குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதாவின்
உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்
அடைவார்கள்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.