தினத்தந்தி 15.04.2013
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ரூ.75 கோடியில் சாலை மற்றும் வளர்ச்சி பணிகள்
சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர், 15–வது மண்டலத்தின் மண்டலக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் தலைவர் என்.சுந்தரம் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ரூ.74 கோடியே 87 லட்சத்தில் சாலை பணிகள், பள்ளி கழிப்பறை மற்றும் பள்ளி கட்டிடம் சீரமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்பொறியாளர் நடராஜ், உதவி செயற்பொறியாளர் பாலாஜி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.