தினமலர் 30.09.2010
விளாங்குடியில் 79 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை திட்ட பணிகள்
விளாங்குடி : விளாங்குடி பேரூராட்சியில் 79 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை திட்டப்பணிகள் துவங்கவுள்ளது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி பாஷா கூறுகையில், “”விளாங்குடி நேதாஜி தெருவில் 17.25 லட்சம் ரூபாய் செலவிலும், இ.பி.காலனியில் 5.20 லட்சம் ரூபாய் செலவிலும், அசோக்நகர் 4 வது தெருவில் 19.30 லட்சம் ரூபாய் செலவிலும், அஞ்சல்நகர் மெயின்ரோடு 19.10 லட்சம் ரூபாய் செலவிலும், பாலமுருகன் கோயில் குறுக்குத்தெரு 1,2,3 வது தெருக்களில் 18.20 லட்சம் ரூபாய் செலவிலும் திட்டப்பணிகள் துவங்கவுள்ளன,” என்றார். அப்போது பேரூராட்சி தலைவர் என்.சுந்தரராஜன் உடனிருந்தார்.