தினமணி 11.01.2010
பொள்ளாச்சியில் 8 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
பொள்ளாச்சி, ஜன. 10: பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் 8 ஆயிரம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நகர்மன்றத் தலைவி டி.ராஜேஸ்வரி சொட்டு மருந்து வழங்கி முகாமைத் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ராஜு, பொள்ளாச்சி இன்னர்வீல் சங்க செயலர் லட்சுமி அப்புக்குட்டி, நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி செவ்வேள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் 25 மையங்களில் 8 ஆயிரம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.