தினகரன் 03.02.2010
விழுப்புரத்தில் 8ம்தேதி துவக்கம் கழிவுநீர்தொட்டிகுழாயில் கொசுவலைபொருத்தும்பணி நகர்மன்ற தலைவர் அறிவிப்பு
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் கொசுக்களை கட்டுப்படுத்த வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி குழாயில் இலவச கொசு வலை பொருத்தும் பணி வருகிற 8ம்தேதி தொடங்கும் என்று நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் கூறினார்.
விழுப்புரம் நகரில் கொசு உற்பத்தி அதிகரித்து வரு கிறது. கொசு தொல்லை யால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. கொசுக் களை ஒழிக்க நகர் மன்றத்தலைவர் ஜனகராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து காற்று வெளியேற குழாய் வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியில் உற்பத்தியாகும் கொசுக்கள் குழாய் மூலம் வெளியே வருவது தெரிய வந்தது. இதற்கு அடுத்தபடியாக குப்பை, வாய்க்காலில் உற்பத்தியாகிறது.
இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக கழிவுநீர் தொட்டி காற்றுக்குழாயில் கொசு வலையை பொருத்துவது என்று கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் ஜனகராஜ் முடிவு செய்தார். அதன்படி 20 ஆயிரம் வீடுகளில் உள்ள
குழாயில் பொருத்தப்படும் கொசு வலையை ஜனகராஜ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
விழுப்புரம் நகரில் கொசுக்களை கட்டுப்படுத்த அனைத்து வீடுகளிலும் உள்ள கழிவுநீர் தொட்டி
குழாயில் இலவச கொசுவலை பொருத்தும் பணி 8ம்தேதி தொடங்குகிறது. 20 ஆயிரம் கொசு வலை தேவைப்படுகிறது. முதற்கட்டமாக 10 ஆயிரம் கொசு வலை வாங்க முடிவாகியுள்ளது. கொசு வலை பொருத்தும் பணியை கவுன்சிலர், சமூகஆர்வலர்கள் உதவியோடு நகராட்சி ஊழியர்கள் மேற்கொள்வார்கள். விழுப்புரம் நகரம் 6 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் 4 இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கப்படும். நகரில் நாய்களை பிடிக்கும் பணி நாளை (4ம்தேதி) துவங்குகிறது. நாய்களை கொல்ல மாட்டோம். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடப்படும்.
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் கண்டறியப்பட்டு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். இதுப்றி தண்டாரோ மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஆணையர் சிவக்குமார், மேலாளர்
லட்சுமிநாராயணன், பொதுப் பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், கவுன்சிலர்கள் ரகுபதி, ஸ்ரீவினோத், கம்பன், கலைவ £ணன் ஆகியோர் இருந்தனர்.