தினகரன் 01.04.2013
மழைநீர் கால்வாய் அமைப்பு பணி 80% முடிந்தது
சென்னை: அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 179வது வார்டில் 11 ஆயிரம் பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை மேயர் சைதை துரைசாமி நேற்று வழங்கினார். அவர் பேசுகையில், வேளச்சேரி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க ரூ23.5 கோடி ஒதுக்கப்பட்டு, 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் முடிக்கப்படும் என்றார். அசோக் எம்.எல்.ஏ., மண்டலக் குழு தலைவர் எஸ்.முருகன், கவுன்சிலர் சரவணன் பங்கேற்றனர்.