தினமணி 10.12.2009
ரூ.8.2 கோடி மதிப்பில் தாராபுரத்தில் சாலைகள் விரிவுபடுத்தும் பணி தீவிரம்
தாராபுரம், டிச.9: தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகள் ரூ.8.2 கோடி மதிப்பில் அக்கலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெருமளவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பல சாலைகள் குறுகலானதாக உள்ளதால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வந்தன. குறிப் பாக தாராபுரம்– உடுமலை சாலை, தாராபுரம்–பொள்ளாட்சி சாலைகள் மிக குறுகலானதாக இருந்து வந்தன. இச்சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தன. இதையடுத்து, தற்போது சாலை விரிவாக்கத்துக்காக மத்திய சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், தாராபுரம்–உடுமலை பைபாஸ் சாலை முதல் பெரும்பள்ளம் வரை 9.8 கி.மீ தூரம் ரூ.5 கோடி மதிப்பிலும், தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை முதல் சத்திரம் கிராமம் வரையிலான 7.2 கி.மீ தூரம் ரூ.3.2 கோடி மதிப்பி லும் அகலப்படுத்தப்படுகின்றன. தற்போது, நடைபெற்று வரும் இப்பணிகள் 10 தினங் களுக்குள் முடிவடையும். இதைத்தொடர்ந்து, தாராபுரம் நகர் பகுதிகளில் நெடுஞ்சா லைத் துறைக்கு உட்பட்ட சாலைகளும் விரைவில் அகலப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.