தினமலர் 07.10.2010
ஆடுதுறை டவுன் பஞ்., சாலை பணிகளுக்கு ரூ.82 லட்சம் ஒதுக்கீடு
கும்பகோணம்: ஆடுதுறை டவுன் பஞ்சாயத்தில் 16 சாலைப்பணிகளுக்காக 82 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ள விபரம் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை டவுன் பஞ்சாயத்து கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஆண்டாள், நிர்வாக அதிகாரி மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர். பின் நிர்வாக அதிகாரி மோகன்குமார், “”தமிழக அரசு 2010 – 11ம் ஆண்டுக்கு சிறப்பு சாலை திட்டத்தில் 16 சாலை பணிகளுக்கு சிமெண்ட் சாலை அமைக்க 82 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளது,” என்றார். துணைத்தலைவர் ஆண்டாள் நன்றி கூறினார்.