தினமணி 24.09.2013
தினமணி 24.09.2013
நீலாங்கரையில் ரூ. 8.66 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்
சென்னை நீலாங்கரையில் ரூ. 8.66 கோடி மதிப்பில் 118 சாலைகள் அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீலாங்கரை
(வார்டு 192) பகுதியில் ரூ. 8.66 கோடியில் 118 சாலைகள் அமைக்கும் பணிகளை
தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மேயர் சைதை
துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் நீலாங்கரையில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தொழிலாளர் குடியிருப்பு பூங்காவையும் அவர்கள் திறந்து வைத்தனர்.
பின்னர் தரமணி மத்திய பல்தொழில்நுட்ப வளாகத்தில் ரூ. 97.60 லட்சம்
மதிப்பில் 600 மீட்டர் நீளமுள்ள 2 சாலைகளை சீரமைக்கும் பணியையும் மேயர்
தொடங்கி வைத்தார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.