தினமணி 19.05.2013
நகரை தூய்மையாக்க 87 குப்பை வண்டிகள்
விழுப்புரம் நகராட்சியை தூய்மையாக்கும் திட்டத்தில் 87 புதிய குப்பை அள்ளும் தள்ளுவண்டிகள், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த தள்ளுவண்டிகள் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளன. நகராட்சித் தலைவர் பாஸ்கர், இந்த புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு வழங்கி குப்பை அள்ளும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த புதிய தள்ளுவண்டிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பச்சை நிற வண்டிகளில் மக்கும் குப்பைகளும், சிவப்பு நிற வண்டிகளில் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படும். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.