தினமணி 12.07.2016
காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு
உள்பட்ட பகுதிகளில் ரூ.88.80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான
பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ்
தலைமை வகித்தார். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு
என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
இதில், காஞ்சிக்கோவிலில் ரூ.38 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காஞ்சிக்கோவில்
பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 50.80 லட்சம்
மதிப்பில் தார் சாலை, மேல்நிலைத் தொட்டி, பொதுக் கழிப்பிடம், ஆழ்துளைக்
கிணறு, குடிநீர்த் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.
இதில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவர்
எஸ்.பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன், காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவர்
கே.பி.பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.