தினமலர் 19.08.2010
ரூ.9 கோடியில் நவீனமாகும் மயான பூமிகள்
சென்னை : “சென்னையில் 13 மயான பூமிகள், ஒன்பது கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்‘ என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.அண்ணா நகர் வேலங்காடு மயான பூமி சம்பந்தமாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மேயர் சுப்ரமணியன் நேற்று காலை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து கூறியதாவது:வேலங்காடு மயான பூமியில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, 10 நாட்களில் செயல்படத் துவங்கும். மாநகராட்சியின் ஜி.கே.எம்., காலனி மயான பூமி, விருகம்பாக்கம் மயான பூமி, அரும்பாக்கம் மயான பூமி, நுங்கம்பாக்கம் மயான பூமி, கண்ணம்மாபேட்டை மயான பூமி போன்று 13 மயான பூமிகள், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தும் பணி நடக்கிறது.ஒன்றரை மாதத்தில், நவீனமயமாக்கும் பணி முடிக்கப்படும். மயான பூமிகளில்பசுமையான இயற்கை சூழல் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.