திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.9 லட்சம் வருவாய்
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில், கழிப்பறை, வாகன நுழைவு கட்டணம் போன்றவைகள் ஏலம் விடப்பட்டதன் மூலம், 9.36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.திருப்போரூர் பேரூராட்சியில், கட்டண கழிப்பிடம், பேருந்து நுழைவு கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களுக்கான பொது ஏலம், பேரூராட்சி செயல் அலுவலர் ரவி முன்னிலையில் நடந்தது.இதன் மூலம், பேருந்து நுழைவு கட்டணமாக, 2.07 லட்சம் ரூபாயும், பேருந்து நிலையம் மற்றும் திருக்குளம் அருகில் உள்ள பொது கழிப்பிடங்கள் ஏலத்தின் மூலம், 2.76 லட்சம் ரூபாயும், மார்க்கெட் கடைகளின் உரிமம், 93,500 ரூபாயும் பேரூராட்சிக்கு வருவாய் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதே போல், சாலையோரங்களில் உள்ள கடைகள் உரிமத்திற்கு, 68,500 ரூபாயும், சாலையோரம் நிறுத்தப்படும் லாரி உரிமத்திற்கு, 1.93 லட்சம் ரூபாயும், வாகன நிறுத்த உரிமத்திற்கு, 77,500 ரூபாயும் என, மொத்தம் 9.36 லட்சம் ரூபாய், பேரூராட்சிக்கு வருவாய் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.