ரூ.9 லட்சம் செலவில் பூங்கா சீரமைப்பு
திருத்தணி:நகராட்சி அலுவலகம் அருகில், பழுதடைந்து உள்ள பூங்கா, ஓரிரு மாதத்தில், 9 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு முருகன் சிலை, முக்கிய தேசத் தலைவர்கள் சிலைகள், விலங்குகள் சிலை, நீர் ஊற்று, குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு மேடை உட்பட, பல்வேறு பொழுது போக்கு உபகரணங்கள் உள்ளது.
பூங்காவை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, பூங்காவை சீரமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்தது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் கூறுகையில், “பழுதடைந்துள்ள பூங்காவை, நகர்புற ஊரமைப்பு திட்டத்தின் (2012-13)கீழ், விளையாட்டு பொருட்கள் மற்றும் பூங்கா சீரமைக்க, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விரைவில் பூங்கா சீரமைக்கப்படும்” என்றார்.