திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிக்கால் உள்பட 9 கிராம ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக் கம், தண்ட ராம்பட்டு, வேங்கிக்கால் உள்பட 9 கிராம ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 நகராட் சிகளும், செங்கம், கீழ்பென் னாத்தூர், வேட்டவலம், புதுப் பாளையம், களம்பூர், கண்ண மங்கலம், போளூர், தேசூர், பெரணமல்லூர், சேத்துப் பட்டு ஆகிய 10 பேரூராட்சி களும் 860 கிராம ஊராட்சி களும் உள்ளன.
இந்த நிலையில் மக்கள் தொகை மற்றும் உள்ளாட்சி அமைப்புக்கான வருமான அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட் சிகள் தரம் உயர்த்தப்படு கிறது. அதன்படி 1920 ம் ஆண்டு நகராட்சிகள் சட்டப்பிரிவு 3(பி)ன் கீழ், 30 ஆயிரம் மக்கள் தொகைக்குள் உள்ள ஊராட் சியை பேரூராட்சியாகவும் 30 ஆயி ரத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊராட் சியை நக ராட்சியாகவும் தரம் உயர்த் தலாம்.
நிர்வாக கட்டமைப்பு
மேலும் 5 அயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகவும் உள்ள கிராம ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த் தலாம் என 17வது சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது புதிய நிர்வாக வசதிக்காக செயல் அலுவலர், எழுத்தர் கள், வரிவசூலிப்பாளர், குடிநீர் பணியாளர்கள், தெரு விளக்கு பணியாளர்கள், பொது சுகாதார பணியாளர் கள், உள்ளிட்ட நிர்வாக கட்ட மைப்பு ஏற்படுத்தப்படும்.
9 ஊராட்சிகள் தரம் உயர்வு
இந்த நிலையில் திருவண் ணாமலை மாவட்டத்தில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமான போதிய நிதி ஆதாரம் உள்ளே வேங்கிக் கால், தண்டராம்பட்டு, தானிப்பாடி, கலசபாக்கம், சந்தவாசல், சேவூர், எஸ்.வி. நகரம், தேவிகாபுரம், தெள் ளாறு ஆகிய கிராம ஊராட் சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்த தகுதியுடைய தாக கண்டறியப்பட்டுள்ளன.
எனவே 9 கிராம ஊராட் சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவ டிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் விஜய் பிங்ளே தலைமையில் நடந் தது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் செல்வ குமார், பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மலைய மான்திருமுடிக்காரி, ஒன்றியக்குழு தலைவர்கள் திருவண்ணாமலை அமுதா குமாரசாமி, தண்டராம்பட்டு ஜானகிராமன், ஜெயராமன், கலசபாக்கம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
அத்தியாவசிய பணிகள்
பேரூராட்சிகளாக தரம் உயர்த்த முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 கிராம ஊராட்சிகளின் வருவாய், பரப்பளவு, மக்க ளின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு நடந்தது.
பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டால் பொது சுகாதாரம், குடிநீர் வினி யோ கம், தெருவிளக்கு பராமரிப்பு போன்ற மக்களுக்கான அதி யாவசிய பணிகள் சிறப்பாக மேம்படுத்த வாய்ப்புள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.