தினமலர் 20.01.2010
குடிநீர் குழாய் உடைப்பு9வது வார்டில் குடிநீர் ‘கட்‘* லாரிகள் மூலம் இன்று குடிநீர் சப்ளை
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி 9வது வார்டில் குழாய் உடைப்பின் காரணமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இன்று(20ம் தேதி) லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்டது 9வது வார்டு. இப்பகுதியில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாயில் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்டது.
செங்கச்சூலைக்கு செல்லும் வழியை சரிசெய்வதற்காக ஜே.சி.பி.,இயந்திரத்தை வைத்து தோண்டும் போது இயந்திரம் மோதியதில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி இன்று(20ம் தேதி) நடக்கிறது.இதன் காரணமாக 9வது வார்டு பகுதியில் உள்ள இந்திராநகர், பாலாஜிநகர், குண்டலகேசிதெரு, ராமலிங்கதெரு, வெற்றிவிநாயகர் தெரு போன்ற பல்வேறு தெருக்களுக்கு நேற்று வழங்கப்டவேண்டிய குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை:குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக அப்பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதன் காரணமாக இன்று(20ம் தேதி) காலை லாரிகள் மூலம் அப்பகுதியில் குடிநீர் சப்ளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.