தினமணி 26.11.2010
களியக்காவிளை பேரூராட்சியில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்:மன்றக் கூட்டத்தில் தீர்மானம்களியக்காவிளை
, நவ. 25:களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் 2010-11-ம் ஆண்டுக்கான பொதுநிதியில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் மன்றத் தலைவர் எஸ்
. இந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சலாவுதீன், வார்டு உறுப்பினர்கள் என். விஜயேந்திரன், பத்மினி, ராதா, அ. ராஜு, கமால், விஜயானந்தராம், ராயப்பன், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் வரவுவிளை– முதுவள்ளிக்குளம் சாலையை ரூ.7.95 லட்சத்திலும், கல்யாணப்பொற்றை– உம்மறக்கல்சாலையை ரூ.6.30 லட்சத்திலும் மேம்பாடு செய்வது, பேரூராட்சி அலுவலக வளாகப்பகுதியில் உள்ள பாறையை உடைத்து சமன்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட ரூ.8 லட்சம் ஒதுக்குவது உள்பட ரூ.90.8 லட்சத்துக்கு பொதுநிதி மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.இதுதவிர பல்வேறு வார்டுகளில் உள்ள இணைப்புச் சாலைகள் மேம்பாடு செய்தல் உள்ளிட்ட 146 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.