தினமணி 02.07.2013
தினமணி 02.07.2013
மாநகராட்சியில் 90 ஊழியர்கள் பணி ஓய்வு
மதுரை மாநகராட்சியில் திங்கள்கிழமை ஒரே நாளில்
நிர்வாக அலுவலர், மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 90 பேர் பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு சேமநல நிதி உள்ளிட்ட ரூ. 60 லட்சம் உடனடியாக பட்டுவாடா
செய்யப்பட்டது.
மாநகராட்சி வடக்கு மண்டல நிர்வாக அலுவலர் சுமதி, மருத்துவ அலுவலர்
ஆனந்தி உள்ளிட்ட இளநிலை உதவியாளர், பிட்டர் மஸ்தூர், மின் உதவியாளர்,
அலுவலக உதவியாளர்கள் என 90 பேர் திங்கள்கிழமை பணி ஓய்வு பெற்றனர்.
இந்த ஊழியர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா, மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
இவர்களுக்கான சேமநல நிதி, சிறப்பு சேமநல நிதி மற்றும் கடைசி மாத
சம்பளம் ஆகியவை காசோலைகளாக மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர்.
நந்தகோபால் ஆகியோர் வழங்கினர். இந்த ஊழியர்களை பாராட்டி துணை ஆணையர்
(பொறுப்பு) சின்னம்மாள், நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், நகர்நல
அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர்கள் ஆ.தேவதாஸ், ரெகோபெயாம், பாஸ்கரன்,
மாநகராட்சி அனைத்து ஊழியர் கூட்டமைப்புத் தலைவர் ப.சுரேஷ்குமார், எழுத்தர்
சங்கத் தலைவர் முகம்மது ரபீக் மற்றும் அலுவலர்கள் பாராட்டி பரிசுகளை
வழங்கினர்.
ஏற்கெனவே, மாநகராட்சி மருத்துவமனைகளில் 18 மருத்துவர் பணியிடங்கள் பல
மாதங்களாக காலியாக உள்ள நிலையில், மேலும் ஒருவர் பணி ஓய்வு பெற்றுள்ளார்.
விரைவில், மருத்துவர் பணியிடம் மட்டுமின்றி அனைத்து காலிப்
பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆணையர் ஆர்.
நந்தகோபால் தெரிவித்தார்.