மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 93% மாணவர்கள் தேர்ச்சி
மதுரை, : மதுரையில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 24 உள்ளன. 10ம் வகுப்பு தேர்வில் இந்த பள்ளிகளில் சராசரியாக 93.48 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2 ஆயிரத்து 591 பேர் தேர்வு எழுதி, இவர்களில் 2 ஆயிரத்து 422 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் மாநில அளவில் மதுரை மாநகராட்சி தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
ஈவெரா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா 494 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகள் பிடித்துள்ளனர். அதன் விவரம்:
2-வது இடம்- சூரியதர்சினி, 490 மதிப்பெண், கஸ்தூரிபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி. இவர் கணக்கில் சென்டமும், அறிவியல், சமூக அறிவியலில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
3-வது இடம்- ஆசிகா, 488 மதிப்பெண், ஈ.வெ.ரா. மகளிர் மேல்நிலைப்பள்ளி.
4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: முனிச்சாலை (17 பேர்), அனுப்பானடி (26 பேர்) உயர்நிலைப்பள்ளிகள், சேதுபதி பாண்டித்துரை (26 பேர்) சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி (128 பேர்) ஆகிய 4 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளில் தேர்வு எழுதியவர்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை வருமாறு:
மாசாத்தியார் (பெண்கள்)- 95-க்கு 93, கஸ்தூரிபாய் காந்தி (பெ) 93-க்கு 91, மணிமேகலை (பெ)- 31-க்கு 30, பாரதியார் (ஆ)- 50-க்கு 49, பொன்முடியார் (பெ)- 150-க்கு 147, காக்கை பாடினியார்- 215-க்கு 210, வெள்ளி வீதியார் (பெ)- 194-க்கு 188, ஈ.வெ.ரா. (பெ) – 646-க்கு 624, என்.எம்.எஸ்.எம். பள்ளி- 24-க்கு 23, இளங்கோ – 91-க்கு 87, அவ்வை (பெ) – 67-க்கு 61, கம்பர் (இருபாலர்)- 76-க்கு 69, மறைமலை அடிகளார்- 9-க்கு 8, பாண்டியன் நெடுஞ்செழியன்- 67-க்கு 59, சுந்தர்ராஜபுரம் – 128-க்கு 112, திரு.வி.க.- 325-க்கு 273, பாரதிதாசனார்- 56-க்கு 47, திருவள்ளுவர்- 32-க்கு 26, உமறுப்புலவர் (ஆ)- 13-க்கு 10, தல்லாகுளம் உயர்நிலைபள்ளி- 32-க்கு 18.