தினமலர் 04.03.2013
வாலாஜாபாத் பேரூராட்சியில் ரூ.95 லட்சத்தில் வளர்ச்சி திட்டம்
வாலாஜாபாத்:”வாலாஜாபாத் பேரூராட்சியில், நடப்பாண்டு 95.32 லட்சம் ரூபாய் மதிப்பில், வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது’ என, செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், பேருந்து நிழற்குடை அமைக்க 3 லட்சம் ரூபாய், மூன்று இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டுவதற்கு 18.60 லட்சம் ரூபாய், நபார்டு திட்டத்தில் தார் சாலை அமைக்க 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், பொது நிதியில் 20 இடங்களில் கால்வாய் கட்டுவதற்காக 36.72 லட்சம் ரூபாய், என, நடப்பாண்டில் பேரூராட்சியில் 95.32 லட்சம் ரூபாய் மதிப்பில், வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது. தற்போது சில பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.