தினத்தந்தி 21.06.2013
மேலப்பாளையத்தில் ரூ.9½ கோடியில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கிவைத்தார்
புதிய பைப் லைன்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலப்பகுதியில் குடிநீர் குழாய்கள்
பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் குடிநீர் வினியோகம் சீராக
நடைபெறாமல் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் வீணாகச்சென்றன. எனவே
புதிய குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைஏற்று ரூ.9 கோடியே 44 லட்சத்தில் கொண்டாநகரம் தலைமை நீர் ஏற்று
நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை சுமார் 15
கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய குழாய்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
தொடக்க விழா
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகராட்சி துணைமேயர் ஜெகநாதன் என்ற
கணேசன் தலைமை தாங்கினார். ஆணையாளர் த.மோகன், மண்டல தலைவர்கள் ஹைதர்அலி,
எம்.சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் விஜிலாசத்யானந்த்,
குழாய்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், உதவி ஆணையாளர் அனிதா, உதவி
செயற்பொறியாளர் சாந்தி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், பாஸ்கர், ஜோசப், டேனியல்
ஆபிரகாம், ஹயாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.