தினகரன் 14.06.2010
எப்.எஸ்.ஐ. உயர்வு ரத்து ஐகோர்ட் உத்தரவால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்புமும்பை
, ஜூன் 14: மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு ஒன்றி னால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டி ருக்கிறது.புறநகர் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற் கான எப்
.எஸ்.ஐ. அளவை 1ல் இருந்து 1.33 ஆக அதிகரித்து மாநில அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித் தது. இந்த அதிகரிப்பை பெறுவதற்காக பில்டர்கள் மாநகராட்சிக்கும் மாநில அரசுக்கும் பிரிமியம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக 326 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி கோரி பில்டர்களி டமிருந்து மாநகராட்சிக்கு விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் இதுவரை 182 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு பில்டர்களிடமிருந்து பிரிமியத் தொகையாக ரூ.348 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது. இந்த ஆண்டிலும் இதன் மூலமாக மேலும் ரூ.600 கோடி கிடைக்கும் என்று மாநக ராட்சி எதிர் பார்த்தது. இந்த பணத்தைக் கொண்டு பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றவும் திட்டமிட்டு இருந்தது.ஆனால் இப்பிரச்னை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம்
, எப்.எஸ்.ஐ. அளவை அதி கரித்து மாநில அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த வியாழக் கிழமை உத்தரவிட்டது.இதன் காரணமாக மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதுடன் பில்டர்களி டமிருந்து ஏற்கனவே பெற்ற பிரிமிய தொகையையும் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது
.புதிய கட்டிடங்களில் உள்ள மாடிப்படிகள்
, லிஃப்ட் மற்றும் வராண்டா ஆகியவற்றுக்கு எப்.எஸ்.ஐ. கிடையாது. எனவே மாநக ராட்சி இந்த பகுதிகளுக்கு பில்டர்களிடம் இருந்து பிரிமியம் வசூலித்து வந்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அதிகா ரிகள் கருதுகின்றனர்.இந்த நிதி இழப்புகளை சரி செய்யும் பொருட்டு
, பழைய உத்தரவில் சில திருத்தங்களை செய்து புதிதாக ஒரு உத்தரவை பிறப்பிப்பது பற்றி மாநக ராட்சியும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு இலாகாவும் பரிசீலித்து வருகின்றன.இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில்
, “வழக்கு விசாரணை யின்போது தெரிந்து கொண்ட சில ஓட்டைகளை அடைத்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட முடியும் என நம்புகிறோம்Ó என்றார்.புதிய அறிவிப்பை வெளியிடுவதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் வேறு ஏதேனும் வழிமுறை கள் உள்ளனவா என்பது பற்றி நாளை மாநகராட்சியில் நடைபெற உள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது
.