தினமணி 22.06.2010
பாதாள சாக்கடைத் திட்டம்: தரமான குழாய்களைப் பயன்படுத்த வலியுறுத்தல்
மாநகராட்சி கவுன்சிலர் ராதாமணிபாரதி, சங்கத் தலைவர் டி.ஏ.வெங்கடாசலம், துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியம், பொருளாளர் ஆர்.நல்லசாமி மற்றும் நிர்வாகிகள், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மாயகிருஷ்ணனை திங்கள்கிழமை சந்தித்தனர். உடைந்த குழாய்களைக் கொண்டு வந்திருந்த அவர்கள், வருவாய் அலுவலரிடம் அளித்த மனு விவரம்:
ஈரோடு சுத்தானந்தன் நகர், சங்கு நகர், பெரியசேமூர் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தரமற்ற, சிறிய குழாய்கள் பதிக்கப்படுகின்றன. மண்ணால் செய்யப்பட்ட இக்குழாய்கள் விரைவில் உடைந்துவிடும் தன்மை கொண்டவை. சூரம்பட்டி, சுத்தானந்தன் நகர் பகுதிகளில் சுமார் 8 அங்குலம் கொண்ட குழாய் பதித்தபோது, அதை முறையாகச் செய்யவில்லை. மேலும் தாமதமாக நடைபெற்ற குழாய் பணியால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். பெரியசேமூர் பகுதியில் குழிகள் தோண்ட வெடி வைக்கப்படுவதால் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.
எனவே பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்கு பெரிய அளவிலான, தரமான குழாய்களைப் பயன்படுத்த வேண்டும்.
இத்திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை மாநகராட்சி கைவிட வேண்டும்
. மத்திய, மாநில அரசுகளின் முழு மானியத் தொகையில் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.ஈரோட்டின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு
, திட்டப்பணிகளை நிறைவேற்றுவதே சிறந்தது என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.