தினமணி 28.06.2010
அரசு அலுவலகங்களில் “தமிழ் வாழ்க‘ பெயர்ப் பலகை
நாமக்கல், ஜூன் 26: செம்மொழி மாநாட்டுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அரசு அலுவலகங்களில் தமிழ்வாழ்க என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளன.
÷கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாகவும், தமிழுக்கு பெருமை சேர்த்திடும் வகையிலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
÷ இரவில் ஒளிரும் விளக்குடன் இந்தப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்–மோகனூர் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பச்சை வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை பார்வையாளர்களை கவரும் வண்ணத்தில் அமைந்துள்ளது.
÷மேலும், மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் முக்கிய சாலை சந்திப்புகள் அனைத்திலும் கோவை செம்மொழி மாநாட்டுக்கு செல்லும் வழி என்ற வாசகங்களுடன் வாகனங்களுக்கு வழிகாட்டும் வகையிலான அறிவிப்புப் பலகைகள் செம்மொழி மாநாடு இலச்சினையுடன் இடம் பெற்றுள்ளன.
÷இந்தப் பலகைகள் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.