தினமலர் 29.06.2010
டவுன் பஞ்சாயத்து கவுன்சில் கூட்டம்
காரிமங்கலம்: காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து கவுன்சில் கூட்டம் நடந்தது. சேர்மன் வீரம்மாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா, செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். “பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு சரிபார்த்தல்‘ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். கவுன்சிலர்கள் சீனிவாசன், மாதப்பன், ரகு, மாரியப்பன், கோவிந்தராஜ், பெருமாள், சத்தியநாராயணன், ஜெயந்தி, சுமத்ரா, வள்ளி, செல்வி, இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து கூட்டம் சேர்மன் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. பஞ்சாயத்து வரவு செலவு கணக்கு மற்றும் டவுன் பஞ்சாயத்தில் நடந்து வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. துணைத்தலைவர் ராசு, செயல் அலுவலர் பழனியம்மாள், கவுன்சிலர்கள் வாசுதேவன், செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், நவுசாத், முத்துக்குமார், பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.