தினகரன் 29.06.2010
நாகர்கோவில் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை 10 நாளில் நியமிக்காவிட்டால் உண்ணாவிரதம்நாகர்கோவில்
, ஜூன் 29:நாகர்கோவில் நகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ள பணியாளர்களை உடனடியாக நியமிக்கா விட்டால் தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் உண்ணாவிரதம் இருப்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.நாகர்கோவில் நகராட்சி பகுதியில்
51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை 2 ஆக பிரித்து 26 வார்டுகளில் நகராட்சியும், 25 வார்டுகளில் தனியாரும் துப்புரவு பணி செய்து வந்தது. இந்த நிலையில் தனியார் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளும் வார்டுகளில் பணி மோசமாக நடந்து வரு வதாக புகார் கூறப்பட் டது.தொடர்ந்து ஜூன்
11ம் தேதி நடந்த அவசர கூட்டத்தில் 51 வார்டு துப்புரவு பணிகளையும் நகராட்சி எடுத்து நடத்தும் என தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. ஆனால் நகராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் நகராட்சி வார்டுகளில் குப்பைகள் தேங்கியது.இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர்
. இந்த நிலையில் நகராட்சி அவசர கூட்டம் நேற்று மாலை நடந்தது. நகராட்சி தலைவர் அசோகன் சால மன் தலைமை வகித்தார். இதில் ஆணையர் ஜானகி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவா தம் வருமாறு
:முருகன்
(பா.ஜ):வடசேரி பகுதி மக்கள்
, ஆராட்டு ரோடு வழியாக ஒழுகினசேரி சுடுகாட்டிற்கு செல்வார்கள். ஆராட்டு ரோட்டில் பாலப் பணி மந்தமாக நடந்து வருவதால், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இத னால் பணியை வேகமாக முடிக்க வேண்டும்.தலைவர்
:பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
.நகராட்சி வார்டு பகுதி யில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது
. மேலும் வார்டு பகுதிகளில் குப்பைகள் தேங் காமல் இருக்க போதிய துப்புரவு பணியாளர்களை நியமித்து நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான கவுன்சிலர்கள் கோரிக்கை வைத் தனர்.இதற்கு பதிலளித்து தலைவர் கூறியதாவது
: நாகர்கோவில் நகராட்சி 51 வார்டுக்கும் மொத்தம் 330 துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நம்மிடம் சுமார் 220 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். மீத முள்ள 100 பணியாளர்களை நியமிக்க அரசிடம் கேட்டுள்ளோம். அவர்களும் விரைவில் நியமிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இன்னும் 2 நாட் களில் அரசு உயர் அதி காரியை பார்த்து 100 துப் புரவு பணியாளர்களையும் நியமிக்க வலியுறுத்துவோம். 10 நாட்களுக்குள் துப்புரவு பணியாளர்களை நியமிக்கவில்லை என்றால் அனை வரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.100
துப்புரவு பணியாளர்களை நியமித்த பிறகும் மொத்தம் உள்ள 330 பணியாளர்களை கொண்டு 51 வார்டுகளையும் துப்புரவு பணி செய்ய முடியாது. நகராட்சியும், தனியாரும் துப்புரவு பணி செய்யும் போது 720 பணியாளர்களை கொண்டு துப்புரவு பணியை மேற்கொண்டு வந்தோம். ஆதலால் எங்களுக்கு கூடுதல் துப்புரவு பணியாளர்களை ஒப்பந்தபடியோ, அல்லது தனியார் மூலமோ தரவேண்டும் என கோரி க்கை வைப்போம் என் றார்.