தினமணி 23.07.2010
ஆயக்குடி பேரூராட்சி வார்டு தேர்தலில் 78 சதம் வாக்குப் பதிவு
பழனி, ஜூலை 22: பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி 15-ம் வார்டு கவுன்சிலர் தூண்டாமணி மறைவைத் தொடர்ந்து இங்கு ஜூலை 22-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் சுதாகரன், கம்யூனிஸ்ட் சார்பில் கமலக்கண்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த வார்டின் மொத்த ஆண் வாக்காளர்கள் 377. பெண் வாக்காளர்கள் 380. பதிவானதில் ஆண் வாக்காளர்கள் 302. பெண் வாக்காளர்கள் 290. வாக்குப்பதிவு 78 சதவிகிதம். தேர்தலின்போது போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.