தினமலர் 28.07.2010
நகராட்சி நிர்வாகம் அதிரடி:வேற்றுமொழி பெயர் பலகை அகற்ற கெடு
நாமக்கல்: “வணிக நிறுவனம், கடைகளில் வைத்துள்ள வேற்றுமொழி பெயர் பலகைகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்‘ என, நாமக்கல் நகராட்சி சேர்மன் செல்வராஜ், கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் நகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்கள், கடைகளில் வைக்கப்
பட்டிருக்கும் வேற்று மொழி பெயர் பலகைகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியிலேயே பெயர் பலகை வைக்க வேண்டும்.ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழியில் பெயர் பலகை வைத்தால், அதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெயர் பலகையில தமிழ் மொழி இல்லாமல் இருந்தால், அந்த பலகைகள் நகராட்சி பணியாளர் மூலம் அகற்றப்படும்.அதற்கான செலவுத்தொகை அந்தந்த வணிக நிறுவனங்களிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.