தினமணி 28.07.2010
ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கம்
சிவகாசி, ஜூலை 27: சிவகாசி–நாரணாபுரம் சாலை, நகராட்சிப் பகுதியில் ரூ.35 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை துவங்கியது. சிவகாசி–விருந்துநகர் புறவழிச் சாலையிலிருந்து 250 மீட்டர் வரையில் நாரணாபுரத்திற்குச் சாலை செல்கிறது.
இந்தச் சாலையின் வடக்குப் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. எனவே இப்பகுதியில் 30 அடி அகலத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நகராட்சி முடிவு செய்தது. இதற்கான நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன், நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி, துணைத் தலைவர் ஜி.அசோகன், சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.