தினமணி 01.08.2009
குடிநீர் திருட்டு: ரூ.5 ஆயிரம் அபராதம்
ஆலந்தூர், ஜூலை 31: ஆலந்தூர் பகுதியில் குடிநீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் திருடியவர்களுக்கு ரூ.5000 அபராதம் மற்றும் 6 மாதம் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆலந்தூர் நகர மன்ற தலைவர் ஆ.துரைவேலு கூறினார். நகர மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.