தினகரன் 29.07.2010
உக்கடத்தில் சுரங்க நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டம் தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
கோவை, ஜூலை 29: உக்கடம் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் சுரங்க நடைபாதை அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. கோவை மாநகராட்சியில் நாளை (30ம் தேதி) மன்ற கூட்டம் நடக்கிறது. இதில், 18 தீர்மானம் இடம் பெறவுள் ளது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி, சுங்கம் ரோட்டில் 3.60 கோடி ரூபாய் செலவில் சுர ங்க நடைபாதை அமைக்கும் தீர்மானம் பிரதானமாக இடம் பெறவுள்ளது. கோவையில் இதுவரை எந்த இடத்திலும் சுரங்க நடைபாதை அமைக்கப்படவில்லை.
அரசு மருத்துவமனை எதிர்ப்புறம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் ரோடு என பல்வேறு இடங் கள் தேர்வு செய்து பின்னர், அவற்றை நிறைவேற்ற மாநகராட்சி முன்வரவில்லை. மழை பெய்தால் இந்த இடங்கள் நீர் தேங்கி குளமாக மாறி விடுவதால் மாநகராட்சி நிர்வாகம் திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டியது.
நீண்ட கால யோசனைக்கு பின்னர் உக்கடம் பஸ் ஸ்டா ண்ட் அருகே புதிய சுரங்க நடைபாதை அமைக்கும் தீர் மானம் மாநகராட்சி கவுன் சில் கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்கப்படவுள்ளது. மேட்டுப்பாளையம் ரோட் டில் அவிநாசிலிங்கம் பல் கலைக் கழகத்தின் சார்பில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
அவிநாசி ரோட்டில் பி. எஸ்.ஜி., நிர்வாகம் அமைத்தது போன்று இந்த நடைபாதை மேம்பாலம் அமையும். இதற் காக மாநகராட்சியின் அனுமதி கோரும் தீர்மானம் இடம்பெறவுள்ளது. மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஆரம்ப பள்ளி மா ணவ மாணவிகளுக்கு இலவசமாக காலணி, காலுறை வழங்குவது தொடர்பான தீர்மானம் வைக்கப்படவுள் ளது.
மாநகராட்சி பகுதியில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் வீடு கட்டவும், 2 ஆயிரம் சதுர அடி பரப்பில் வணிக கட்டடம் கட்டவும் கூடுதல் அதிகாரம் வழங்கி வெளியிடப்பட்ட அரசு உத்தரவு கவுன் சில் விவாதத்திற்கு வைக்கப்படும்.
செம்மொழி மாநாட்டிற்காக 14 நிழற்குடைகள் அமைக்கப்பட்டது தொடர் பான தீர்மானம், பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் தொட்டி கட்டுவது தொடர்பான தீர்மானம் இடம்பெறவுள்ளது. செம்மொழி மாநாட்டிற்காக மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிவறை வாகனங்கள், குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டது. இது தொடர்பாக கம்யூ., கவுன்சிலர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கவுள்ளனர். செம்மொழி மாநாடு பணிகள், செலவினம் குறித்து காரசார விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.