தினமணி 02.08.2010
வள்ளியூர் பேரூராட்சியில் திங்கள்கிழமை தோறும் மனுநீதிநாள் முகாம்
வள்ளியூர், ஆக.1: வள்ளியூர் பேரூராட்சியில் மக்களது குறைகளைக் கேட்டறியும் வகையில் திங்கள்கிழமைதோறும் மனுநீதிநாள் முகாம் நடைபெறும் என பேரூராட்சித் தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தெரிவித்தார்.
வள்ளியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு இன்னும் நல்லமுறையில் சேவை செய்திட பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரியப்படுத்தலாம்.
இதற்கான மனுநீதிநாள் முகாம் திங்கள்கிழமை (ஆக.2) நடக்கிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் பேரூராட்சி அலுவலகத்தில் முகாம் நடைபெற உள்ளது என்றார் பேரூராட்சித் தலைவர்.