தினமலர் 03.08.2010
ராஜா தேசிங்கு விழா:பேரூராட்சி தீர்மானம்செஞ்சி
:செஞ்சியில் ஆண்டு தோறும் ராஜாதேசிங்கு விழா நடத்த வேண்டும் என செஞ்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.செஞ்சி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் மஸ்தான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் அழகிரிசாமி, கவுன்சிலர்கள் சேகர், சையத் சாதுல்லா, நெடுஞ்செழியன், சி. சங்கர் (8வது வார்டு), இ. சங்கர் (13வது வார்டு), மணிமேகலை, அற்புதம்பட்டி, ஜோலாமாலினி கலந்து கொண்டனர். இதில் 13வது வார்டு கவுன்சிலர் சங்கர் பேசுகையில், செஞ்சியில் கடந்த 2005ம் ஆண்டு நடத்த ராஜா தேசிங்கு விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து பேரூராட்சி தலைவர் மஸ் தான் பேசுகையில், மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் தான் இந்த விழாவை முடிவு செய்ய வேண்டும். இதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என கூறினார்.இதை தொடர்ந்து செஞ்சியில் ஆண்டுதோறும் ராஜா தேசிங்கு விழா நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.