தினகரன் 04.08.2010
உடுமலை ரோடுகளில் குவியும் மண்ணை அள்ள 20 வண்டிகள் நகராட்சி வாங்கியது
உடுமலை,ஆக.4: உடுமலை ரோடுகளில் குவியும் மண்ணை அப்புறப்படுத்த 20 வண்டிகளை நகராட்சி நிர்வாகம் வாங்கி உள்ளது.
உடுமலையில் பொள் ளாச்சி& பழனி ரோடு, தாரா புரம் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு, திருப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் மண் குவிந்துள்ளது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அடித்து வரப்படும் மண் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. காற்றில் இந்த மண் பறப்பதால் ரோட்டில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் விழுந்து அதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் ரூ.1.75 லட்சத்தில் 20 வண்டிகளை வாங்கி உள்ளது. மண்ணை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் கொண்டு போய் கொட்டுவதற்கு இந்த வண்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இத்தகவலை நகராட்சி சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடுமலை ரோடுகளில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் 20 வண்டிகளை தருவித்துள்ளது.