தினமணி 04.08.2010
கூகலூர் பேரூராட்சி துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
கோபி
, ஆக.3: கோபி அருகேயுள்ள கூகலூர் பேரூராட்சியின் துணைத் தலைவராக முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ÷கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.இங்கு கடந்த
2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இவர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என மற்ற உறுப்பினர்கள் இவர் மீது குற்றம் சாட்டி கடந்த
2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.மொத்தம் வந்திருந்த
13 உறுப்பினர்களில் 12 பேர் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு அளித்தனர். இதனால் தலைவர் பதவியை சுப்பிரமணியம் இழந்தார்.÷இதைத் தொடர்ந்து இந்த பேரூராட்சியின் துணைத் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த நஞ்சப்பன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் துணைத் தலைவருக்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.கூகலூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆறுமுகத்திடம் துணைத் தலைவர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார்
. இதன் அடிப்படையில் முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஆறுமுகம் தெரிவித்தார்.