தினகரன் 13.08.2010
28ம் தேதி தங்கவயல் நகராட்சி தலைவர் தேர்தல்
தங்கவயல்,ஆக. 13: தங்கவயல் நகரசபை தலைவர் மற் றும் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் 28&ம் தேதி நடைபெறவுள்ளது.
தங்கவயல் நகரசபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக ளுக்கான தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டாம் சுற்றுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரசபை தேர்தல் 2 அரை வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையிலும், ஜாதி அடிப்படைலும் நடைப்பெறும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தங்கவயல் நகரசபை கவுன்சில் 2 அரை ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அடுத்த 2 அரை ஆண்டிற்கான நகரசபை கவுன்சில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஆனது வரும் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் பதவியை பிசிஎம்(ஏ) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை தலைவர் பதவியை பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான மனுதாக்கல் செய்வதற்கான கடைசிநாள் 28ம் தேதியே ஆகும்.
அன்று பகல் ஒரு மணிவரை மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கபட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிற்பகல் 2மணிக்கு, தாக்கல் செய்த மனுக்கல் மீது பரிசீலனை செய்யபடும்.
இதனை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறும். மேற்கண்ட அறிவிப்பை இதன் தேர்தல் அதிகாரியும் கோலார் மாவட்ட துணை கமிஷனருமான பெத்தபையா அறிவித்துள்ளார்.
தங்கவயலில் தற்போதைய நகரசபை தலைவராக ரசித்கான் மற்றும் துணை தலைவராக சுமா உள்ளார்.