தினமலர் 16.08.2010
பணகுடி டவுன் பஞ்.,சில்கலையரங்கம் திறப்பு
வள்ளியூர்:பணகுடி டவுன் பஞ்.,சில் 2.55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கை எம்.எல்.ஏ., அப்பாவு திறந்து வைத்தார்.பணகுடி டவுன் பஞ்., 3வது வார்டு கோரிக்காலனியில் ராதாபுரம் எம்.எல்.ஏ., அப்பாவு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு டவுன் பஞ்.,தலைவர் டயானா சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் முருகன் வரவேற்றார்.புதிய கலையரங்கை அப்பாவு எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கருணாநிதி, டேவிட்ராஜா, மாவட்ட திமுக பிரதிநிதி அசோக்குமார், செல்லத்துரை, ரவிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.