தினமணி 17.08.2010
திருத்தங்கல் நகராட்சி தரம் உயர்வு
சிவகாசி, ஆக. 16: சிவகாசி வட்டம், திருத்தங்கல் 3-ம் நிலை நகராட்சி, முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, நகர்மன்றத் துணைத் தலைவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை கூறியதாவது:
திருத்தங்கல் பேரூராட்சியாக இருந்து 7.10.2004-ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு ஆண்டுக்கு ரூ. 4 கோடி அளவுக்கு வரி உள்ளிட்ட வருவாய் கிடைத்து வருவதால், இதை முதல்நிலை நகராட்சியாக 9-8-2010 முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 21 வார்டுகள் கொண்ட இந்த நகராட்சியில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதை அடுத்து, பஸ் நிலையம் மற்றும் தனியே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.