மாலை மலர் 17.08.2010
உலகில் முன்னணி நகர வரிசையில் டெல்லி
, மும்பைக்கு இடம்புதுடெல்லி
, ஆக. 17- உலகில் முன்னணி நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நகரத்தின் பரப்பளவு கலாச்சாரம், ஒருமைப்பாடு, வர்த்தகம், புதுமை ஆகியவற்றை மையமாக வைத்து ஆய்வு நடத்தி முன்னணி நகரத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர். வெளிநாட்டு கொள்கை தொடர்பான பத்திரிகை ஒன்று சிகாகோவில் உள்ள சர்வதேச விவகார கவுன்சிலுடன் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தி இருக்கிறது.இதில் அமெரிக்காவில் நியூயார்க் முதல் இடத்தையும்
, இங்கிலாந்து தலைநகரம் லண்டன் 2-வது இடத்தையும், ஜப்பான் தலைநகரம் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளன.இந்த வரிசையில் டெல்லி
45-வது இடத்தையும், மும்பை 46-வது இடத்தையும் பெற்றுள்ளன. கொல்கத்தா 65-வது இடத்தில் உள்ளது.பாரிஸ்
4-வது இடத்தையும் ஹாங்காங் 5-வது இடத்தையும், சிகாகோ 6-வது இடத்தையும், லாஸ்ஏஞ்சல்ஸ் 7-வது இடத்தையும், சிங்கப்பூர் 8-வது இடத்தையும், சிட்னி 9-வது இடத்தையும், சியோல் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.அமெரிக்க தலைநகரம் வாஷிங்டன்
13-வது இடத்திலும், சீன தலைநகரம் பீஜிங் 13-வது இடத்திலும், ரஷிய தலைநகரம் மாஸ்கோ 25-வது இடத்திலும் இருக்கின்றன.பாகிஸ்தானில் கராச்சி நகரம் மட்டும் பட்டியலில் உள்ளது
. இது 60-வது இடத்தில் இருக்கிறது. வங்காள தேச தலைநகர் டாக்கா 64-வது இடத்தில் இருக்கிறது.