தினமணி 19.08.2010
9 கோடியில் 13 மயான பூமிகள் நவீனமயம்
சென்னை, ஆக.18: சென்னையில் உள்ள 13 மயான பூமிகளை | ரூ9 கோடியில் நவீனமாக்கும் பணிகள் ஒன்றரை மாதத்தில் முடிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேளங்காடு என்ற இடத்தில் மாநகராட்சி மயான பூமியை மேயர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:
சென்னை மாநகராட்சி, பொதுமக்களின் சேவைக்காக இலவசமாக சடலங்களை எரித்தல், தேவையான குளிர்சாதனப் பெட்டிகள், அமரர் ஊர்திகளை வழங்குதல் போன்றவற்றை செய்து வருகிறது.
இந்த இலவச சேவைக்காக பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இதுதவிர ஜி.கே.எம். காலனியில் உள்ள மயான பூமி ரூ| 77.35 லட்சத்திலும், விருகம்பாக்கம் மயான பூமி | ரூ71.54 லட்சத்திலும், அரும்பாக்கம் மயான பூமி |ரூ 74.31 லட்சத்திலும், நுங்கம்பாக்கம் மயான பூமி வ்| 74.73 லட்சத்திலும், கண்ணம்மாபேட்டை மயான பூமி ரூ| 70.08 லட்சத்திலும், வேளச்சேரி மயான பூமி |ரூ 65.60 லட்சத்திலும், கானகம் தரமணி மயான பூமி |ரூ 76.71 லட்சத்திலும் என 7 மயான பூமிகளில் மின்சார தகன மேடைகள் அமைக்கப்பட்டு, நவீனமாக்கும் பணிகள் | ரூ5.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல கொடுங்கையூர், மேல்பட்டி பொன்னப்பன் தெரு மயான பூமி, வேளச்சேரி என 6 மயான பூமிகளில் எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டு, நவீனமாக்கும் பணிகள் |ரூ 3.97 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் ஒன்றரை மாதத்தில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார் அவர். மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், துணை ஆணையர் (சுகாதாரம்) ஜோதி நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.